முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

சிறப்புடைய இடுகை

அனிதா - நாம் இழந்த சமூகப்போராளி

பெயர்: அனிதா வயது: 17 மதிப்பெண்கள்: பொது தேர்வில்: 1176 நீட் தேர்வில்: 76 மருத்துவம் பயில வாய்ப்பு: 2016 ஆம் விதிப்படி : நிச்சயம்   2017 ஆம் விதிப்படி: முதலில் நிச்சயம். பின்னர்: இல்லை..பின்னர் நிச்சயம்...பின்னர் இல்லை..பின்னர் நிச்சயமாக இல்லை. அந்த பிஞ்சு உள்ளம் என்ன பாடு பட்டிருக்கும்?  குழந்தை பருவத்தில் இருந்து கொண்டிருந்த மருத்துவ கனவு நிறைவேறும் என்கின்ற நம்பிக்கை. பின்னர் கிட்டாமல் போன பொழுது எழுந்த மனமுடைவு. துக்கம். இவற்றை ஆற்றிக்கொள்ளும் புறத்தெ மீண்டும் கிட்டிவிடும் என்று துளிர்த்து எழும் நம்பிக்கை. பின்னர் அது இயலாது என்று தெரியும் பொழுது வரும் அதே மனமுடைவு. துக்கம்.. இவற்றையெல்லாம் தன்னியல்பில் எடுத்துக்கொண்டு , சமூகம் சொல்லிக்கொடுத்த விதி படி தன்னுரிமைக்காக உயர் நீதிமன்றம் ,உச்ச நீதிமன்றம் என பல சபைகளிலும் போராடிய அசாத்திய தைரியம். பின்னர் எல்லா வழிகளும் மூடப்பட்டதால் எழுந்த வெஞ்சினம். எதிர்காலத்தை பற்றி மனதில் உருவாகிய வெற்றிடம். இவை அனைத்தையும் தன்னுடைய பிழையாகவே கருதி தன்னுயிரையும் துச்சமென கருதி மாய்த்து கொண்ட கொடூரம்.. சற்றே பின்வாங்கி பார்த்தோ
சமீபத்திய இடுகைகள்

எளிதில் வங்கி கணக்கிலிருந்து பணம் மாற்றுவது எப்படி?

நமது வாழ்நாளில் பல முறை இந்த சூழ்நிலையை சந்தித்திருக்கிறோம். வெளி  இடத்தில நாம் வேலை செய்து கொண்டிருப்போம் . வீட்டிற்கு பணம் அனுப்புவதற்காக பல இடங்களில் ஏறி இறங்கி இருப்போம். பத்து வருடங்களுக்கு முன்னால் வங்கிகளில் இருந்து Demand draft (வரைவு காசோலை) இல்லாவிட்டால் தபால் அலுவலகங்களில் இருந்து electronic money transfer (மின்னனு பணமாற்றம்) செய்திருப்போம். ஆனால் இன்று வீட்டில் இருந்து கொண்டே ஒரு நொடியில் பணமாற்றம் செய்ய ஒரு வழி வந்துள்ளது. அது தான் BHIM என்ற பெயரை உடைய ஆண்ட்ராய்டு பயன்பாட்டு தொகுப்பு (android app ) ஆகும். இதனை பயன்படுத்தி இந்தியாவில் உள்ள பெரும்பாலான வங்கிகளின் சேமிப்பு கணக்கிற்கு பணம் அனுப்ப முடியும். இதனை எவ்வாறு பயன் படுத்த வேண்டும் இன்று இப்பொழுது பார்க்கலாம். அதற்கு முன்னர் BHIM பயன்படுத்த தேவைகள் என்ன என்று பார்ப்போம். முதலில், BHIM பயன்பு (app என்ற ஆங்கில வார்த்தைக்கு நான் வைத்த தமிழ் சுருக்கம்) நிறுவுவதற்கு உங்களிடம் ஒரு அலைபேசி இருக்கவேண்டும். அதுவும் தற்போதைய ( 2015 ஆம் ஆண்டிற்கு பின்னால்) உற்பத்தி செய்யப்பட்ட அலைபேசி என்றால் வசதியாக இருக்கும்.  நிற்க : உங்

பாகம் மூன்று ..வரி..வட்டி..கிஸ்தி...

13 ஆம் நூற்றாண்டு. சோழ சேர , பாண்டிய நாட்டு வரி நிர்வாகம் காலம் காலமாக இருந்த வழக்கிலிருந்து மாரி அரசு நிர்வாகிகளின் கையில் வந்தடைந்ததை இந்த  பதிவில் விவரியாக படித்தோம். அந்த காலத்தில் இருந்து சற்று காலச்சக்கரத்தை சுழற்றி 13 ஆம் நூற்றாண்டில் கால் வைப்போம். பாரதத்தின் அப்போதைய நிலைமை காண்பவர்களின் கண்களில் ரத்தத்தை வரவழைக்கும். எங்கு பார்க்கினும் பசி. வறுமை..!தொண்ணூறு (90) சதவீதத்திற்கும் மேலான மக்கள் வறுமையில் வாழ்ந்தனர். பஞ்சம் எனும் பேரிடர் , வருடாவருடம் தவறாமல் வந்தது.ஆண்டுதோறும் பசியாலும் பிணியாலும் மக்கள் சாரை சாரையாக மடிந்தனர். ஊர் நிர்வாகங்கள் வழக்கொழிந்து போய் கொலைகளும் கொள்ளைகளும் பன்மடங்கு அதிகரித்தன. நல்ல விளை நிலங்கள் விதைப்பில்லாமல் பட்டு போயின. ஆனால் புத்தகங்களில் நாம் படித்த இந்தியா , மிகவும் செழிப்பான , சீரும் சிறப்பும் இன்னும் பல செல்வங்களும் மிகுந்த நாடாயிற்றே? என்று வினவுகிறீர்களா? ஆம். புத்தகங்களில் நாம் படித்த இந்தியாவும் உண்மையே. ஆனால் அந்த இந்தியாவில் அரசர்களும்  நாட்டின் மேல்மட்டத்தில் உள்ள செல்வந்தர்களும்  மட்டுமே இருந்தனர். மிதி உள்ள அனைவரும் வியர்வை சி

பாகம் இரண்டு: வரி..வட்டி..கிஸ்தி.

பத்தாம் நூற்றாண்டு .. காலம் காலமாக  தமிழகம் சேர, சோழ பாண்டிய மன்னர்களால்  சமபங்காக    ஆளப்பட்டு வந்த சூழ்நிலை மாறி  சோழ மன்னர்களின் ஆதிக்கம் மேலே எழும்ப தொடஙகிய காலம்.விஜயாலய சோழன் , ராஜ ராஜ சோழன் , ராஜேந்திர சோழன் போன்ற வீர புத்திரர்கள் தமிழ் மண்ணில் கால் பதித்து நடந்த காலம். சோழ ராஜ்ஜியத்தில் நாட்டு நிர்வாகம் சீர்படுத்தப்பட்டு சோழ மன்னர்களின் நேரடி கண்காணிப்பில் கொணரப்பட்டது. இதில் முக்கியமாக வரி நிலுவை மற்றும் வசூல் செய்யும் அதிகாரம் குறுநில மன்னர்களிடமிருந்து பறிக்கப்பட்டு சோழ மன்னனின் நேர் சேவையில் பணியாற்றும் அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது. வரி வசூலிப்பில் இந்த வழக்கம், அக்காலத்து சமூகத்தில் ஓர் பெரிய மாற்றத்தை உண்டாக்கியது. தமிழக ஊர்களில் நாம் முந்தைய பதிவில் பார்த்தபடி வரி நிலுவை ஊர் தலைவர்களால் நியமிக்கப்பட்டு , அதில் ஒரு பங்கு அந்த பகுதியின் குறுநில மன்னனிடம் அளிக்கப்படும். அக்குறுநில மன்னனும் அப்பகுதியை சேர்ந்தவனானதால் வரி நிலுவைகளில்  பெரிய கருத்து வேறுபாடுகள் இருக்காது. சோழ நாட்டில் வரலாற்றில் முதல் முறையாக ஒரு ஊர் தர வேண்டிய வரிப்பணத்தை நாட்டு தலை நகரத்தில் உள்ள அ

பாகம் ஒன்று: வரி . வட்டி. கிஸ்தி.

"தமிழில் எனக்கு பிடிக்காத வார்த்தை மன்னிப்பு"  என கேப்டன் கர்ஜிக்கலாம். ஆனால் உண்மையில் நமக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை "வரி' யாகத்தான் இருக்கும். சமீபத்திய கணக்கெடுப்பு ஒன்றில் 100 இல் 2 இந்தியர் மட்டுமே வரி காட்டுவதாக செய்தி வெளியானது. இதன் மூலம்  வரி ஏய்ப்பு நமது தேசிய குணமென்று தெரிந்து கொள்ளலாம் . ஆனால் இக்குணம் எப்படி உருவானது என்று அறிந்து கொள்ள நாம் சரித்திரத்தின் பக்கங்களை புரட்டி பார்க்க வேண்டும். "கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய  மூத்த குடி தமிழ் குடி" என்று மார் தட்டி கொள்வோம். அத்தகைய  ஆதி காலத்தில் இருந்தே நமது தமிழ் நாட்டில் வரி என்பது  "திரை " எனவும் "இறை" எனவும் வழக்கில் இருந்தது. பண்டைய தமிழகத்தின் ஊர் நிர்வாகம் இன்றைய முன்னேறிய நாடுகளின் நிர்வாகத்தையும் வெக்கி தலை குனிய வைக்கும். தமிழக வரி நிர்வாகத்தில் ஊர்கள்  மிக முக்கிய இடம் பெற்றிருந்தன. இன்றைய அரசு போலன்று பழந்தமிழகத்தில் கிராமங்களும், ஊர்களும் தற்காலத்திய தனியார் நிறுவனங்கள் போல் செயல்பட்டன.ஒவ்வொரு ஊரும் தத்தமது  வரவு செலவுகளை தீர

மனதில் ஒரு ஜல்லிகட்டு

ஜல்லிக்கட்டு தடையை நீக்க கோரி கடந்த வாரம் நடந்த போராட்டம். அதனை ஒட்டி வந்த சில "whatsapp" செய்திகள், "facebook" பதிவுகள். அதன் பின்னர் நடைபெற்ற சில சம்பவங்கள். இவைகளின் திரட்டுகள், சிந்தனைக்கு..பிழை இருந்தால் மன்னிக்கவும். 1) சதிகளும் சூழ்ச்சிகளும் கதைகளில் படிக்க , படங்களில் பார்க்க நன்றாக இருக்கும். நடைமுறை வாழ்க்கை அவ்வாறாக இருந்தால் என்னாவது? தமிழ் மக்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 50 மில்லியன் என எடுத்து கொள்வோம். மொத்த உலகத்தின் தற்போதைய மக்கள் தொகை 6 பில்லியன். உலகத்தில் உள்ள அனைவருக்கும் தமிழர்களின் பாரம்பரியத்தை குலைப்பதே வேலையாக இருக்க முடியுமா? PETA வின் நடவடிக்கையானது ஜல்லிக்கட்டு விஷயத்தில் பாதகமாக இருக்கலாம். அதற்காக  அந்நிறுவனத்தையும், அந்நிறுவனத்தின் ஆதரவாளர்களையும் முக்கியமாக அந்நிறுவனத்தின்  இந்திய  கிளை முதல்வரை  சேடுவது நமது பாரம்பரியம் தானா?  2) சமுக வலையில் வரும்  செய்திகள் எல்லாம் 100 /100 உண்மை என நம்பி நாமும் பகிர்கின்றோம். உங்கள் ஊர்களில் நடுவில் கூரை ஒன்று அமைத்து ஒலி பெருக்கிகளில்  செய்திகளை பரப்பி , அவற்றில் பெரு வாரியான செய