முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாகம் மூன்று ..வரி..வட்டி..கிஸ்தி...

13 ஆம் நூற்றாண்டு.

சோழ சேர , பாண்டிய நாட்டு வரி நிர்வாகம் காலம் காலமாக இருந்த வழக்கிலிருந்து மாரி அரசு நிர்வாகிகளின் கையில் வந்தடைந்ததை இந்த  பதிவில் விவரியாக படித்தோம். அந்த காலத்தில் இருந்து சற்று காலச்சக்கரத்தை சுழற்றி 13 ஆம் நூற்றாண்டில் கால் வைப்போம். பாரதத்தின் அப்போதைய நிலைமை காண்பவர்களின் கண்களில் ரத்தத்தை வரவழைக்கும். எங்கு பார்க்கினும் பசி. வறுமை..!தொண்ணூறு (90) சதவீதத்திற்கும் மேலான மக்கள் வறுமையில் வாழ்ந்தனர். பஞ்சம் எனும் பேரிடர் , வருடாவருடம் தவறாமல் வந்தது.ஆண்டுதோறும் பசியாலும் பிணியாலும் மக்கள் சாரை சாரையாக மடிந்தனர். ஊர் நிர்வாகங்கள் வழக்கொழிந்து போய் கொலைகளும் கொள்ளைகளும் பன்மடங்கு அதிகரித்தன. நல்ல விளை நிலங்கள் விதைப்பில்லாமல் பட்டு போயின.

ஆனால் புத்தகங்களில் நாம் படித்த இந்தியா , மிகவும் செழிப்பான , சீரும் சிறப்பும் இன்னும் பல செல்வங்களும் மிகுந்த நாடாயிற்றே? என்று வினவுகிறீர்களா? ஆம். புத்தகங்களில் நாம் படித்த இந்தியாவும் உண்மையே. ஆனால் அந்த இந்தியாவில் அரசர்களும்  நாட்டின் மேல்மட்டத்தில் உள்ள செல்வந்தர்களும்  மட்டுமே இருந்தனர். மிதி உள்ள அனைவரும் வியர்வை சிந்த உழைத்து விட்டு அவ்வுழைப்பிற்கு தகுந்த கூலி வாராமல் ஒரு வேளை உணவிற்கு கூட வழியில்லாமல் வறுமையில் வாழ்ந்தனர். வரலாற்றில் நமக்கு இழைக்கப்பட்ட்ட அநீதிகளில் இது தான் மிகவும் கொடுமையானது.  நமது உண்மையான வரலாறு மறைக்கப்பட்டு அரசர்களும் அவர்களின் சேவகர்களும் வாழ்ந்த வாழ்க்கையானது நமது வரலாறாக சித்தரிக்கப்படுகிறது.

இருக்கட்டும். இந்த வறுமையானது எப்பொழுது விதைக்கப்பட்டது? நாம் இந்த பதிவில் படித்தபடி வரி விதிக்கும் அதிகாரமானது ஊர் தலைவரிடமிருந்து பறிக்கப்பட்டு தலைநகரத்தில் உள்ள அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது. இருப்பினும் முதலில் அரசர்களும் , அவர்களின் அதிகாரிகளும் நியாயமாக நடந்ததால் பெரிய மாற்றங்கள் நிகழவில்லை. ஆனால் 13 ஆம் நூற்றாண்டில் அரசனுக்கும் குடிமக்களுக்கும் இடையிலான ஒப்பந்தத்தில் ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்தது. அரசனும் அவனுடையா அரசாங்கமும் மக்களை விட முக்கியமாக கருதப்பட்டனர். இது பழங்காலத்தில் இருந்து புழங்கி வரும் கருத்து  தான் என்றாலும் 13 ஆம் கால கட்டத்தில் இது கடுமையாக பின்பற்றப்பட்டது . எவ்வளவு கடுமையாக என்று கேட்கிறீர்களா? நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் உழைப்பிலும்  முதலுரிமை மன்னனுக்கு கோரப்பட்டது. மன்னனுக்கு போக மீதி எஞ்சியது மட்டுமே மக்களுக்கு கிட்டியது. இதுவும் பழங்காலத்தில் இருந்து வரும் வழக்கம் தான். ஆனால் எங்கே வேறுபட்டது என்றறிய நாம் கணக்கு புத்தகத்தை  புரட்ட வேண்டி இருக்கும். உதாரணத்திற்கு உங்களுக்கு 10 ரூபாய்  வருமானமென்றால் அதில் 9 ரூபாய் ஐம்பது காசுகள் அரசுக்கு சேர வேண்டியதாக வசூலிக்கப்பட்டது. இந்த தொகை எப்படி வந்தது?? அதில் தான் அந்த அதிகாரிகளின் குரூர புத்தி வெளிப்பட்டது. ஒரு குடும்பம் ஒரு வேளை , (குறிப்பு: ஒரு வேளை,  மூன்று வேளையல்ல..! ), உணவருந்த ஆகும் செலவு ஐம்பது காசுகள் தான் என அதிகாரிகள் குத்து மதிப்பாக  தீர்மானித்தனர் . ஆக , ஐம்பது காசுகள் மட்டுமே மக்களுக்கு விட்டுவிட்டு மற்றதை அபகரித்தனர். இதுவும் நிர்ணயிக்கப்பட்ட விதியாக இருந்தாலும் பரவாயில்லை. ஒருவன் எவ்வளவு வரி கட்டுவான்  என்று அனுமானித்து அதில் இரண்டு மடங்கு வரி நியமித்தனர். கட்ட மறுத்தால் அடி உதை ! கட்ட முடியாவிட்டால் மரண தண்டனை , மற்றும் நிலம், ஆநிரை  இன்ன பிற சொத்து அபகரிப்பு, என்று கொடுங்கோல் ஆட்சி நடந்தது. முகலாயர்கள் , மராட்டியர்கள் ,நாயக்கர்கள், ஆங்கிலேயர் என அரசர்கள் மாறினாலும் இந்த கொடுமையான வரி நிர்வாகம் மட்டும் மாறவே இல்லை. இந்த வரிச்சுமையை தவிர்க்கத்தான் மக்கள் வரி ஏய்ப்பு செய்ய துவங்கினர். வருமானத்தை ஒளிந்து வைப்பது, செல்வங்களை பதுக்குவது , வெளியே எளிமையாக வாழ்வது..இது போன்ற நம்முடைய தேசிய குணங்கள் இங்கு இருந்துதான் பிறந்தன.

ஆம்.13 ஆம் நூற்றாண்டில் ஆரம்பித்த இந்த வரி நிர்வாகம் ,20 ஆம் நூற்றாண்டு வரை நீடித்தது. வியப்பாக இருக்கிறதா? பழைய செய்திகளை புரட்டவும்.1991 ஆம் ஆண்டு கூட நமது அரசு, நாம் தேர்வு செய்த ஜனநாயக அரசு, ஒரு லட்சத்திற்கும் மேலாக உள்ள வருமானத்தில் 56% வரி விதித்தது.  அதாவது ஒரு லட்சத்தில் 56000 .அரசுக்கு. மீதி உள்ள 44000 மட்டுமே சம்பளம் வாங்கியவருக்கு. வாங்கும் சம்பளத்தில் பாதிக்கு மேல் அரசுக்கு சொந்தம் என்றால் நீங்கள் வரி செலுத்த ஆவலாக இருப்பீர்களா?


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பாகம் இரண்டு: வரி..வட்டி..கிஸ்தி.

பத்தாம் நூற்றாண்டு .. காலம் காலமாக  தமிழகம் சேர, சோழ பாண்டிய மன்னர்களால்  சமபங்காக    ஆளப்பட்டு வந்த சூழ்நிலை மாறி  சோழ மன்னர்களின் ஆதிக்கம் மேலே எழும்ப தொடஙகிய காலம்.விஜயாலய சோழன் , ராஜ ராஜ சோழன் , ராஜேந்திர சோழன் போன்ற வீர புத்திரர்கள் தமிழ் மண்ணில் கால் பதித்து நடந்த காலம். சோழ ராஜ்ஜியத்தில் நாட்டு நிர்வாகம் சீர்படுத்தப்பட்டு சோழ மன்னர்களின் நேரடி கண்காணிப்பில் கொணரப்பட்டது. இதில் முக்கியமாக வரி நிலுவை மற்றும் வசூல் செய்யும் அதிகாரம் குறுநில மன்னர்களிடமிருந்து பறிக்கப்பட்டு சோழ மன்னனின் நேர் சேவையில் பணியாற்றும் அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது. வரி வசூலிப்பில் இந்த வழக்கம், அக்காலத்து சமூகத்தில் ஓர் பெரிய மாற்றத்தை உண்டாக்கியது. தமிழக ஊர்களில் நாம் முந்தைய பதிவில் பார்த்தபடி வரி நிலுவை ஊர் தலைவர்களால் நியமிக்கப்பட்டு , அதில் ஒரு பங்கு அந்த பகுதியின் குறுநில மன்னனிடம் அளிக்கப்படும். அக்குறுநில மன்னனும் அப்பகுதியை சேர்ந்தவனானதால் வரி நிலுவைகளில்  பெரிய கருத்து வேறுபாடுகள் இருக்காது. சோழ நாட்டில் வரலாற்றில் முதல் முறையாக ஒரு ஊர் தர வேண்டிய வரிப்பணத்த...

மனதில் ஒரு ஜல்லிகட்டு

ஜல்லிக்கட்டு தடையை நீக்க கோரி கடந்த வாரம் நடந்த போராட்டம். அதனை ஒட்டி வந்த சில "whatsapp" செய்திகள், "facebook" பதிவுகள். அதன் பின்னர் நடைபெற்ற சில சம்பவங்கள். இவைகளின் திரட்டுகள், சிந்தனைக்கு..பிழை இருந்தால் மன்னிக்கவும். 1) சதிகளும் சூழ்ச்சிகளும் கதைகளில் படிக்க , படங்களில் பார்க்க நன்றாக இருக்கும். நடைமுறை வாழ்க்கை அவ்வாறாக இருந்தால் என்னாவது? தமிழ் மக்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 50 மில்லியன் என எடுத்து கொள்வோம். மொத்த உலகத்தின் தற்போதைய மக்கள் தொகை 6 பில்லியன். உலகத்தில் உள்ள அனைவருக்கும் தமிழர்களின் பாரம்பரியத்தை குலைப்பதே வேலையாக இருக்க முடியுமா? PETA வின் நடவடிக்கையானது ஜல்லிக்கட்டு விஷயத்தில் பாதகமாக இருக்கலாம். அதற்காக  அந்நிறுவனத்தையும், அந்நிறுவனத்தின் ஆதரவாளர்களையும் முக்கியமாக அந்நிறுவனத்தின்  இந்திய  கிளை முதல்வரை  சேடுவது நமது பாரம்பரியம் தானா?  2) சமுக வலையில் வரும்  செய்திகள் எல்லாம் 100 /100 உண்மை என நம்பி நாமும் பகிர்கின்றோம். உங்கள் ஊர்களில் நடுவில் கூரை ஒன்று அமைத்து ஒலி பெருக்கிகளில்  செய்திகளை பரப்பி , அவற்றில் பெ...

பாகம் ஒன்று: வரி . வட்டி. கிஸ்தி.

"தமிழில் எனக்கு பிடிக்காத வார்த்தை மன்னிப்பு"  என கேப்டன் கர்ஜிக்கலாம். ஆனால் உண்மையில் நமக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை "வரி' யாகத்தான் இருக்கும். சமீபத்திய கணக்கெடுப்பு ஒன்றில் 100 இல் 2 இந்தியர் மட்டுமே வரி காட்டுவதாக செய்தி வெளியானது. இதன் மூலம்  வரி ஏய்ப்பு நமது தேசிய குணமென்று தெரிந்து கொள்ளலாம் . ஆனால் இக்குணம் எப்படி உருவானது என்று அறிந்து கொள்ள நாம் சரித்திரத்தின் பக்கங்களை புரட்டி பார்க்க வேண்டும். "கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய  மூத்த குடி தமிழ் குடி" என்று மார் தட்டி கொள்வோம். அத்தகைய  ஆதி காலத்தில் இருந்தே நமது தமிழ் நாட்டில் வரி என்பது  "திரை " எனவும் "இறை" எனவும் வழக்கில் இருந்தது. பண்டைய தமிழகத்தின் ஊர் நிர்வாகம் இன்றைய முன்னேறிய நாடுகளின் நிர்வாகத்தையும் வெக்கி தலை குனிய வைக்கும். தமிழக வரி நிர்வாகத்தில் ஊர்கள்  மிக முக்கிய இடம் பெற்றிருந்தன. இன்றைய அரசு போலன்று பழந்தமிழகத்தில் கிராமங்களும், ஊர்களும் தற்காலத்திய தனியார் நிறுவனங்கள் போல் செயல்பட்டன.ஒவ்வொரு ஊரும் தத்தமது  வரவு செலவுகளை தீர...