13 ஆம் நூற்றாண்டு. சோழ சேர , பாண்டிய நாட்டு வரி நிர்வாகம் காலம் காலமாக இருந்த வழக்கிலிருந்து மாரி அரசு நிர்வாகிகளின் கையில் வந்தடைந்ததை இந்த பதிவில் விவரியாக படித்தோம். அந்த காலத்தில் இருந்து சற்று காலச்சக்கரத்தை சுழற்றி 13 ஆம் நூற்றாண்டில் கால் வைப்போம். பாரதத்தின் அப்போதைய நிலைமை காண்பவர்களின் கண்களில் ரத்தத்தை வரவழைக்கும். எங்கு பார்க்கினும் பசி. வறுமை..!தொண்ணூறு (90) சதவீதத்திற்கும் மேலான மக்கள் வறுமையில் வாழ்ந்தனர். பஞ்சம் எனும் பேரிடர் , வருடாவருடம் தவறாமல் வந்தது.ஆண்டுதோறும் பசியாலும் பிணியாலும் மக்கள் சாரை சாரையாக மடிந்தனர். ஊர் நிர்வாகங்கள் வழக்கொழிந்து போய் கொலைகளும் கொள்ளைகளும் பன்மடங்கு அதிகரித்தன. நல்ல விளை நிலங்கள் விதைப்பில்லாமல் பட்டு போயின. ஆனால் புத்தகங்களில் நாம் படித்த இந்தியா , மிகவும் செழிப்பான , சீரும் சிறப்பும் இன்னும் பல செல்வங்களும் மிகுந்த நாடாயிற்றே? என்று வினவுகிறீர்களா? ஆம். புத்தகங்களில் நாம் படித்த இந்தியாவும் உண்மையே. ஆனால் அந்த இந்தியாவில் அரசர்களும் நாட்டின் மேல்மட்டத்தில் உள்ள செல்வந்தர்களும் மட்டுமே இருந்தனர். மிதி உள்ள ...
: noun Meaning 1. (Yōga.) Expiration of breath 2. Cathartic