முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எளிதில் வங்கி கணக்கிலிருந்து பணம் மாற்றுவது எப்படி?

நமது வாழ்நாளில் பல முறை இந்த சூழ்நிலையை சந்தித்திருக்கிறோம். வெளி  இடத்தில நாம் வேலை செய்து கொண்டிருப்போம் . வீட்டிற்கு பணம் அனுப்புவதற்காக பல இடங்களில் ஏறி இறங்கி இருப்போம். பத்து வருடங்களுக்கு முன்னால் வங்கிகளில் இருந்து Demand draft (வரைவு காசோலை) இல்லாவிட்டால் தபால் அலுவலகங்களில் இருந்து electronic money transfer (மின்னனு பணமாற்றம்) செய்திருப்போம். ஆனால் இன்று வீட்டில் இருந்து கொண்டே ஒரு நொடியில் பணமாற்றம் செய்ய ஒரு வழி வந்துள்ளது. அது தான் BHIM என்ற பெயரை உடைய ஆண்ட்ராய்டு பயன்பாட்டு தொகுப்பு (android app ) ஆகும். இதனை பயன்படுத்தி இந்தியாவில் உள்ள பெரும்பாலான வங்கிகளின் சேமிப்பு கணக்கிற்கு பணம் அனுப்ப முடியும். இதனை எவ்வாறு பயன் படுத்த வேண்டும் இன்று இப்பொழுது பார்க்கலாம். அதற்கு முன்னர் BHIM பயன்படுத்த தேவைகள் என்ன என்று பார்ப்போம். முதலில், BHIM பயன்பு (app என்ற ஆங்கில வார்த்தைக்கு நான் வைத்த தமிழ் சுருக்கம்) நிறுவுவதற்கு உங்களிடம் ஒரு அலைபேசி இருக்கவேண்டும். அதுவும் தற்போதைய ( 2015 ஆம் ஆண்டிற்கு பின்னால்) உற்பத்தி செய்யப்பட்ட அலைபேசி என்றால் வசதியாக இருக்கும்.  நி...