பத்தாம் நூற்றாண்டு .. காலம் காலமாக தமிழகம் சேர, சோழ பாண்டிய மன்னர்களால் சமபங்காக ஆளப்பட்டு வந்த சூழ்நிலை மாறி சோழ மன்னர்களின் ஆதிக்கம் மேலே எழும்ப தொடஙகிய காலம்.விஜயாலய சோழன் , ராஜ ராஜ சோழன் , ராஜேந்திர சோழன் போன்ற வீர புத்திரர்கள் தமிழ் மண்ணில் கால் பதித்து நடந்த காலம். சோழ ராஜ்ஜியத்தில் நாட்டு நிர்வாகம் சீர்படுத்தப்பட்டு சோழ மன்னர்களின் நேரடி கண்காணிப்பில் கொணரப்பட்டது. இதில் முக்கியமாக வரி நிலுவை மற்றும் வசூல் செய்யும் அதிகாரம் குறுநில மன்னர்களிடமிருந்து பறிக்கப்பட்டு சோழ மன்னனின் நேர் சேவையில் பணியாற்றும் அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது. வரி வசூலிப்பில் இந்த வழக்கம், அக்காலத்து சமூகத்தில் ஓர் பெரிய மாற்றத்தை உண்டாக்கியது. தமிழக ஊர்களில் நாம் முந்தைய பதிவில் பார்த்தபடி வரி நிலுவை ஊர் தலைவர்களால் நியமிக்கப்பட்டு , அதில் ஒரு பங்கு அந்த பகுதியின் குறுநில மன்னனிடம் அளிக்கப்படும். அக்குறுநில மன்னனும் அப்பகுதியை சேர்ந்தவனானதால் வரி நிலுவைகளில் பெரிய கருத்து வேறுபாடுகள் இருக்காது. சோழ நாட்டில் வரலாற்றில் முதல் முறையாக ஒரு ஊர் தர வேண்டிய வரிப்பணத்த...
: noun Meaning 1. (Yōga.) Expiration of breath 2. Cathartic