முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாகம் இரண்டு: வரி..வட்டி..கிஸ்தி.


பத்தாம் நூற்றாண்டு ..

காலம் காலமாக  தமிழகம் சேர, சோழ பாண்டிய மன்னர்களால்  சமபங்காக    ஆளப்பட்டு வந்த சூழ்நிலை மாறி  சோழ மன்னர்களின் ஆதிக்கம் மேலே எழும்ப தொடஙகிய காலம்.விஜயாலய சோழன் , ராஜ ராஜ சோழன் , ராஜேந்திர சோழன் போன்ற வீர புத்திரர்கள் தமிழ் மண்ணில் கால் பதித்து நடந்த காலம். சோழ ராஜ்ஜியத்தில் நாட்டு நிர்வாகம் சீர்படுத்தப்பட்டு சோழ மன்னர்களின் நேரடி கண்காணிப்பில் கொணரப்பட்டது. இதில் முக்கியமாக வரி நிலுவை மற்றும் வசூல் செய்யும் அதிகாரம் குறுநில மன்னர்களிடமிருந்து பறிக்கப்பட்டு சோழ மன்னனின் நேர் சேவையில் பணியாற்றும் அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.

வரி வசூலிப்பில் இந்த வழக்கம், அக்காலத்து சமூகத்தில் ஓர் பெரிய மாற்றத்தை உண்டாக்கியது. தமிழக ஊர்களில் நாம் முந்தைய பதிவில் பார்த்தபடி வரி நிலுவை ஊர் தலைவர்களால் நியமிக்கப்பட்டு , அதில் ஒரு பங்கு அந்த பகுதியின் குறுநில மன்னனிடம் அளிக்கப்படும். அக்குறுநில மன்னனும் அப்பகுதியை சேர்ந்தவனானதால் வரி நிலுவைகளில்  பெரிய கருத்து வேறுபாடுகள் இருக்காது. சோழ நாட்டில் வரலாற்றில் முதல் முறையாக ஒரு ஊர் தர வேண்டிய வரிப்பணத்தை நாட்டு தலை நகரத்தில் உள்ள அதிகாரிகள் தீர்மானித்தனர்.

இருப்பினும் சோழ நாட்டில் அதிகாரிகள் திறம்பட செயல்பட்டதால் வரிகள்  கட்டுப்பாட்டில் இருந்தன. சோழ நாட்டை வலிமையான மன்னர்கள் ஆண்ட வரையில் இந்த அமைப்பானது சீராக செயல்பட்டது. 10 ஆம் நூற்றாண்டில் ராஜ ராஜ சோழன் காலத்தில் உருவான இவ்வமைப்பானது சுமார் ஆறு தலைமுறைகளாக ,அதாவது சுமார் இரு நூறு ஆண்டுகள் பெரிய பிரச்சனைகள் ஏதுமின்றி வழக்கில் இருந்தது.  அதன் பின்னர் வந்த சோழ மன்னர்கள் வலுவிழந்து இருந்ததனால் சோழ நாடு பொலிவிழந்தது .அதன் பின்னர் பல குறுநில மன்னர்கள் தற்காலிகமாக அதிகாரத்தை  கைப்பற்றினாலும் , தமிழகத்தின் எல்லா பிராந்தியங்களையும்  முழுமையாக  தங்கள் கட்டுப்பாட்டில் வைக்க முடியாமல் போனது. இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டது வரி நிர்வாகமாகத்தான் இருக்க வேண்டும். தினம் மூன்று முறை ஆடை மாற்றும் நடிக நடிகைகள் போல தமிழகத்தில் அரசர்கள் நித்தம் ஒன்றும் மாதம் ஒன்றுமாக மாறினர். அவ்வாறு மாறிய ஆட்சி நிர்வாகத்தில் அதிகாரிகள் மட்டும் நிரந்தரமாகவா இருப்பார்கள்? அவர்களும் மாறினர்  அல்லது மாற்றப்பட்டனர்.

 அவ்வாறு  வந்த அதிகாரிகள் தம்மை பணியிலமர்த்திய மன்னனுக்கு தமது விசுவாசத்தை காட்ட வரிகளை பல மடங்கு உயர்த்தினர். இக்காலத்தில் இருந்து நமது ஊரமைப்புகள் மெதுவாக திறன் இழந்தன. வரிச்சுமை அதிகரித்ததால் ஊரின் பிற வேலைப்பாடுகள் பின்னுக்கு தள்ளப்பட்டன. காவல் , கொல்லர், கலைஞர்கள்  என ஊர் பணியில் இருந்த சேவைக்காரர்கள் ஊர் கஜானாவில் பணம் இல்லாத காரணத்தால் வேலை இழந்தனர்.வருமானத்தில் பெரும்பாலான பகுதி மன்னனுக்கு சென்றதால் பெருவாரியான மக்கள் வறுமைக்கு தள்ளப்பட்டனர். நாட்டு வளம் மன்னனின் கஜானாவிற்கு சென்று அதன் மூலம் தேவையற்ற போர்களிலும் படையெடுப்புகளிலும் செலவழிந்தது. இது கூட தேவலாம் என்று எண்ணக்கூடிய காலம் வந்தது..

அது...13 ஆம் நூற்றாண்டு...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மனதில் ஒரு ஜல்லிகட்டு

ஜல்லிக்கட்டு தடையை நீக்க கோரி கடந்த வாரம் நடந்த போராட்டம். அதனை ஒட்டி வந்த சில "whatsapp" செய்திகள், "facebook" பதிவுகள். அதன் பின்னர் நடைபெற்ற சில சம்பவங்கள். இவைகளின் திரட்டுகள், சிந்தனைக்கு..பிழை இருந்தால் மன்னிக்கவும். 1) சதிகளும் சூழ்ச்சிகளும் கதைகளில் படிக்க , படங்களில் பார்க்க நன்றாக இருக்கும். நடைமுறை வாழ்க்கை அவ்வாறாக இருந்தால் என்னாவது? தமிழ் மக்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 50 மில்லியன் என எடுத்து கொள்வோம். மொத்த உலகத்தின் தற்போதைய மக்கள் தொகை 6 பில்லியன். உலகத்தில் உள்ள அனைவருக்கும் தமிழர்களின் பாரம்பரியத்தை குலைப்பதே வேலையாக இருக்க முடியுமா? PETA வின் நடவடிக்கையானது ஜல்லிக்கட்டு விஷயத்தில் பாதகமாக இருக்கலாம். அதற்காக  அந்நிறுவனத்தையும், அந்நிறுவனத்தின் ஆதரவாளர்களையும் முக்கியமாக அந்நிறுவனத்தின்  இந்திய  கிளை முதல்வரை  சேடுவது நமது பாரம்பரியம் தானா?  2) சமுக வலையில் வரும்  செய்திகள் எல்லாம் 100 /100 உண்மை என நம்பி நாமும் பகிர்கின்றோம். உங்கள் ஊர்களில் நடுவில் கூரை ஒன்று அமைத்து ஒலி பெருக்கிகளில்  செய்திகளை பரப்பி , அவற்றில் பெ...

பாகம் ஒன்று: வரி . வட்டி. கிஸ்தி.

"தமிழில் எனக்கு பிடிக்காத வார்த்தை மன்னிப்பு"  என கேப்டன் கர்ஜிக்கலாம். ஆனால் உண்மையில் நமக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை "வரி' யாகத்தான் இருக்கும். சமீபத்திய கணக்கெடுப்பு ஒன்றில் 100 இல் 2 இந்தியர் மட்டுமே வரி காட்டுவதாக செய்தி வெளியானது. இதன் மூலம்  வரி ஏய்ப்பு நமது தேசிய குணமென்று தெரிந்து கொள்ளலாம் . ஆனால் இக்குணம் எப்படி உருவானது என்று அறிந்து கொள்ள நாம் சரித்திரத்தின் பக்கங்களை புரட்டி பார்க்க வேண்டும். "கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய  மூத்த குடி தமிழ் குடி" என்று மார் தட்டி கொள்வோம். அத்தகைய  ஆதி காலத்தில் இருந்தே நமது தமிழ் நாட்டில் வரி என்பது  "திரை " எனவும் "இறை" எனவும் வழக்கில் இருந்தது. பண்டைய தமிழகத்தின் ஊர் நிர்வாகம் இன்றைய முன்னேறிய நாடுகளின் நிர்வாகத்தையும் வெக்கி தலை குனிய வைக்கும். தமிழக வரி நிர்வாகத்தில் ஊர்கள்  மிக முக்கிய இடம் பெற்றிருந்தன. இன்றைய அரசு போலன்று பழந்தமிழகத்தில் கிராமங்களும், ஊர்களும் தற்காலத்திய தனியார் நிறுவனங்கள் போல் செயல்பட்டன.ஒவ்வொரு ஊரும் தத்தமது  வரவு செலவுகளை தீர...