முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மனதில் ஒரு ஜல்லிகட்டு



ஜல்லிக்கட்டு தடையை நீக்க கோரி கடந்த வாரம் நடந்த போராட்டம். அதனை ஒட்டி வந்த சில "whatsapp" செய்திகள், "facebook" பதிவுகள். அதன் பின்னர் நடைபெற்ற சில சம்பவங்கள். இவைகளின் திரட்டுகள், சிந்தனைக்கு..பிழை இருந்தால் மன்னிக்கவும்.

1) சதிகளும் சூழ்ச்சிகளும் கதைகளில் படிக்க , படங்களில் பார்க்க நன்றாக இருக்கும். நடைமுறை வாழ்க்கை அவ்வாறாக இருந்தால் என்னாவது? தமிழ் மக்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 50 மில்லியன் என எடுத்து கொள்வோம். மொத்த உலகத்தின் தற்போதைய மக்கள் தொகை 6 பில்லியன். உலகத்தில் உள்ள அனைவருக்கும் தமிழர்களின் பாரம்பரியத்தை குலைப்பதே வேலையாக இருக்க முடியுமா? PETA வின் நடவடிக்கையானது ஜல்லிக்கட்டு விஷயத்தில் பாதகமாக இருக்கலாம். அதற்காக  அந்நிறுவனத்தையும், அந்நிறுவனத்தின் ஆதரவாளர்களையும் முக்கியமாக அந்நிறுவனத்தின்  இந்திய  கிளை முதல்வரை  சேடுவது நமது பாரம்பரியம் தானா? 

2) சமுக வலையில் வரும்  செய்திகள் எல்லாம் 100 /100 உண்மை என நம்பி நாமும் பகிர்கின்றோம். உங்கள் ஊர்களில் நடுவில் கூரை ஒன்று அமைத்து ஒலி பெருக்கிகளில்  செய்திகளை பரப்பி , அவற்றில் பெரு வாரியான செய்திகள் போலி என்றாயினால் ஊர் சும்மா விடுமா? பின்னர் சமுக ஊடகங்களில் மட்டும் எல்லா செய்திகளையும் எப்படி பகிர்கிறீர்கள்? ஜல்லிக்கட்டு நமது பசுக்களை அழியாமல் காப்பாற்றுவதாக ஒரு செய்தி.. பாலில் A1,A2  வகை இருப்பதாக இன்னொரு செய்தி. இவை எந்த அளவிற்கு உண்மை? சமுக வலை என்பது நமது ஊர் டீக்கடை பெஞ்சு/ ஆலமரத்தடி என்று உணர்க! பொறுப்பற்ற , நேரத்தை வீணடிக்கும் செய்திகளை எவ்வாறு நிகழ்வாழ்வில் தவிர்ப்பீர்களோ அது போல சமுக ஊடகங்களிலும் தூர விலகுக..

3)  "ஏனுங்க, வந்திடுங்க" என்று வார்த்தைக்கு வார்த்தை "ங்க" போட்டு பேசும் கோயம்புத்தூர் தமிழ் முதல் "ஏலேய்" "வால" எனும் தெற்கத்திய தமிழ் வரை, வார்த்தைகள் மாறினாலும் பிற மனிதர்களுக்கு மரியாதை அளிப்பது நமது கலாச்சாரத்தின் தனித்தன்மைகளில் ஒன்று. ஆயினும் சமுக ஊடகங்களில் மாறுபாடான கருத்தை கண்டால் கலவரமாகி தெரு குழாய் சண்டை நடக்கிறது. நேரில் காணும் போது இங்கிதம் , நாகரிகமாக
நடக்கும் அன்பர்கள் , வலையில்(web) முற்றிலும் வேறுபட்ட அவதாரமாக காட்சியளிப்பது எப்படி?
4) ஜல்லிக்கட்டு உணர்வு பூர்வமான விஷயம். அனைவரும் கொதித்தெழுவது இயல்பு. எனினும் இதே போல பல விஷயங்கள் , அநீதிகள் தமிழ்நாட்டில் உள்ளன. சென்ற வருடம்,சாதி மாறி திருமணம் செய்த ஒரு ஜோடி cam முன்னர்  வெட்டி சாய்க்கப்பட்டனர் . அப்பொழுது சாதி எனும் இழிவை தடை செய்ய எந்த தமிழனும் முன்வரவில்லையே? தமிழ்நாட்டின் 10 பல்கலைகழகங்களில் முதல்வர் பதவியிலிருந்து , ஆசிரியர் பதவி நியமனம் வரை ஆளும் கட்சி தீர்மானிக்கிறது. அதனை தடுக்க எந்த மாணவனும் தயாரா?
 நமக்கு வசதிப்படும் விஷயங்களுக்கு மட்டும் தான் போராட்டமா?

5) "I may not agree with what you say. but I will defend to death your right to say it" 
என்பது ஆங்கில எழுத்தாளர் Evelyn Beatrice Hall இன் பிரபலமான வாக்கியம். ஜனநாயகத்தின் மிக மிக அடிப்படையான தனி நபர் சுதந்திரத்தை பிரதிபலிக்கும் வாக்குமூலம் இது. நமக்கு மாற்றான கொள்கை கொண்டவர்களுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டுமென்றால் அது ஜனநாயகமன்று. அது ஆதிக்கவர்க்கத்தின் இன்னோரு முகம். நாம் அடைந்த சுதந்திரம் இன்னொரு குழு ஆதிக்கம் செலுத்த வகை செய்யும் ஆயுதமில்லை. இக் கொள்கையில் நமக்கு உடன்பாடு இல்லை என்றால் நாம் உண்மையில் சுதந்திரத்தை மதிக்கின்றோமா?







கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பாகம் இரண்டு: வரி..வட்டி..கிஸ்தி.

பத்தாம் நூற்றாண்டு .. காலம் காலமாக  தமிழகம் சேர, சோழ பாண்டிய மன்னர்களால்  சமபங்காக    ஆளப்பட்டு வந்த சூழ்நிலை மாறி  சோழ மன்னர்களின் ஆதிக்கம் மேலே எழும்ப தொடஙகிய காலம்.விஜயாலய சோழன் , ராஜ ராஜ சோழன் , ராஜேந்திர சோழன் போன்ற வீர புத்திரர்கள் தமிழ் மண்ணில் கால் பதித்து நடந்த காலம். சோழ ராஜ்ஜியத்தில் நாட்டு நிர்வாகம் சீர்படுத்தப்பட்டு சோழ மன்னர்களின் நேரடி கண்காணிப்பில் கொணரப்பட்டது. இதில் முக்கியமாக வரி நிலுவை மற்றும் வசூல் செய்யும் அதிகாரம் குறுநில மன்னர்களிடமிருந்து பறிக்கப்பட்டு சோழ மன்னனின் நேர் சேவையில் பணியாற்றும் அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது. வரி வசூலிப்பில் இந்த வழக்கம், அக்காலத்து சமூகத்தில் ஓர் பெரிய மாற்றத்தை உண்டாக்கியது. தமிழக ஊர்களில் நாம் முந்தைய பதிவில் பார்த்தபடி வரி நிலுவை ஊர் தலைவர்களால் நியமிக்கப்பட்டு , அதில் ஒரு பங்கு அந்த பகுதியின் குறுநில மன்னனிடம் அளிக்கப்படும். அக்குறுநில மன்னனும் அப்பகுதியை சேர்ந்தவனானதால் வரி நிலுவைகளில்  பெரிய கருத்து வேறுபாடுகள் இருக்காது. சோழ நாட்டில் வரலாற்றில் முதல் முறையாக ஒரு ஊர் தர வேண்டிய வரிப்பணத்த...

பாகம் ஒன்று: வரி . வட்டி. கிஸ்தி.

"தமிழில் எனக்கு பிடிக்காத வார்த்தை மன்னிப்பு"  என கேப்டன் கர்ஜிக்கலாம். ஆனால் உண்மையில் நமக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை "வரி' யாகத்தான் இருக்கும். சமீபத்திய கணக்கெடுப்பு ஒன்றில் 100 இல் 2 இந்தியர் மட்டுமே வரி காட்டுவதாக செய்தி வெளியானது. இதன் மூலம்  வரி ஏய்ப்பு நமது தேசிய குணமென்று தெரிந்து கொள்ளலாம் . ஆனால் இக்குணம் எப்படி உருவானது என்று அறிந்து கொள்ள நாம் சரித்திரத்தின் பக்கங்களை புரட்டி பார்க்க வேண்டும். "கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய  மூத்த குடி தமிழ் குடி" என்று மார் தட்டி கொள்வோம். அத்தகைய  ஆதி காலத்தில் இருந்தே நமது தமிழ் நாட்டில் வரி என்பது  "திரை " எனவும் "இறை" எனவும் வழக்கில் இருந்தது. பண்டைய தமிழகத்தின் ஊர் நிர்வாகம் இன்றைய முன்னேறிய நாடுகளின் நிர்வாகத்தையும் வெக்கி தலை குனிய வைக்கும். தமிழக வரி நிர்வாகத்தில் ஊர்கள்  மிக முக்கிய இடம் பெற்றிருந்தன. இன்றைய அரசு போலன்று பழந்தமிழகத்தில் கிராமங்களும், ஊர்களும் தற்காலத்திய தனியார் நிறுவனங்கள் போல் செயல்பட்டன.ஒவ்வொரு ஊரும் தத்தமது  வரவு செலவுகளை தீர...