"தமிழில் எனக்கு பிடிக்காத வார்த்தை மன்னிப்பு"
என கேப்டன் கர்ஜிக்கலாம். ஆனால் உண்மையில் நமக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை "வரி' யாகத்தான் இருக்கும். சமீபத்திய கணக்கெடுப்பு ஒன்றில் 100 இல் 2 இந்தியர் மட்டுமே வரி காட்டுவதாக செய்தி வெளியானது. இதன் மூலம் வரி ஏய்ப்பு நமது தேசிய குணமென்று தெரிந்து கொள்ளலாம் . ஆனால் இக்குணம் எப்படி உருவானது என்று அறிந்து கொள்ள நாம் சரித்திரத்தின் பக்கங்களை புரட்டி பார்க்க வேண்டும்.
"கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி தமிழ் குடி"
என்று மார் தட்டி கொள்வோம். அத்தகைய ஆதி காலத்தில் இருந்தே நமது தமிழ் நாட்டில் வரி என்பது "திரை " எனவும் "இறை" எனவும் வழக்கில் இருந்தது. பண்டைய தமிழகத்தின் ஊர் நிர்வாகம் இன்றைய முன்னேறிய நாடுகளின் நிர்வாகத்தையும் வெக்கி தலை குனிய வைக்கும்.
தமிழக வரி நிர்வாகத்தில் ஊர்கள் மிக முக்கிய இடம் பெற்றிருந்தன. இன்றைய அரசு போலன்று பழந்தமிழகத்தில் கிராமங்களும், ஊர்களும் தற்காலத்திய தனியார் நிறுவனங்கள் போல் செயல்பட்டன.ஒவ்வொரு ஊரும் தத்தமது வரவு செலவுகளை தீர்மானிக்கும் அதிகாரம் பெற்றிருந்தன. ஊருக்கு உட்பட்ட உழவு நிலங்களின் விளைச்சல் ஆண்டுக்கு மூன்று முறை தீர்மானிக்கப்பட்டு வரி தீர்வை அறிவிக்கப்பட்டது. உழுவோரும்,தொழில் செய்வோரும் மற்றும் கோயில் பூசாரிகளும் தமது வருமானங்களில் பத்தில் இல் ஒரு பங்கு(10%) முதல் நாலில் இல் ஒரு பங்கு(25%) வரை காலத்திற்கேற்ப வரி செலுத்தினர். இவ்வாறாக சேர்க்கப்படட வரிப்பணத்திலிருந்து ஒரு பங்கு அரசுக்கு சென்றது. இன்றொரு பங்கு ஊருக்கு வேண்டிய கடடமைப்பு வேலைகளை செய்வதற்கு ஒதுக்கப்பட்டது . இன்றொரு பங்கில் காவலாளிகள் , நாட்டிய கலைஞர்கள் ஆகியோர் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டது. ஆண்டுக்கு ஒரு முறை வரவு செலவு கணக்குகள் சரி பார்க்க பட்டு லாப நஷ்டங்கள் பதிவு செய்யப்பட்டன.
இந்த ஊர் வழக்கு வரலாற்றின் வெளிச்சத்திற்கு உட்படாத மிக பண்டை காலத்தில் உருவாகி பல்லாயிரம் வருடங்கள் நடைமுறையில் இருந்தது. ஊரே வரி நிர்ணயித்ததால் , வரித்தொகை நியாயமாகவும் , மக்களுடைய கஷ்ட துக்கங்களுக்கு ஏற்ற படியும் கணக்கிலிடப்படடது. ஆதலால் வரி ஏய்ப்பு என்பதே சமூக வழக்கில் இல்லை. தமிழகத்தின் எல்லா ஊர்களும் செல்வத்தில் திளைத்தன. உள்ளூர் வியாபாரம், உழவு , கடல் வணிகம் என எல்லாவற்றிலும் தமிழர்கள் வெற்றி கொடி நாட்டினர். இத்தகைய மேன்மையான தத்துவம் எல்லா நேரமும் மேன்மேலும் உயர முடியாது அல்லவா? எல்லா நல்ல விஷயங்களும் ஒரு நாள் முடிவுக்கு வர வேண்டியது இயற்கையின் நியதி. அது போல தமிழகத்திற்கும் ஒரு நாள் இழிவு வந்தது ..
10 ஆம் நூற்றாண்டில் ..
தொடரும்.....
கருத்துகள்
கருத்துரையிடுக