முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எளிதில் வங்கி கணக்கிலிருந்து பணம் மாற்றுவது எப்படி?

நமது வாழ்நாளில் பல முறை இந்த சூழ்நிலையை சந்தித்திருக்கிறோம். வெளி  இடத்தில நாம் வேலை செய்து கொண்டிருப்போம் . வீட்டிற்கு பணம் அனுப்புவதற்காக பல இடங்களில் ஏறி இறங்கி இருப்போம். பத்து வருடங்களுக்கு முன்னால் வங்கிகளில் இருந்து Demand draft (வரைவு காசோலை) இல்லாவிட்டால் தபால் அலுவலகங்களில் இருந்து electronic money transfer (மின்னனு பணமாற்றம்) செய்திருப்போம். ஆனால் இன்று வீட்டில் இருந்து கொண்டே ஒரு நொடியில் பணமாற்றம் செய்ய ஒரு வழி வந்துள்ளது. அது தான் BHIM என்ற பெயரை உடைய ஆண்ட்ராய்டு பயன்பாட்டு தொகுப்பு (android app ) ஆகும். இதனை பயன்படுத்தி இந்தியாவில் உள்ள பெரும்பாலான வங்கிகளின் சேமிப்பு கணக்கிற்கு பணம் அனுப்ப முடியும். இதனை எவ்வாறு பயன் படுத்த வேண்டும் இன்று இப்பொழுது பார்க்கலாம். அதற்கு முன்னர் BHIM பயன்படுத்த தேவைகள் என்ன என்று பார்ப்போம்.

முதலில், BHIM பயன்பு (app என்ற ஆங்கில வார்த்தைக்கு நான் வைத்த தமிழ் சுருக்கம்) நிறுவுவதற்கு உங்களிடம் ஒரு அலைபேசி இருக்கவேண்டும். அதுவும் தற்போதைய ( 2015 ஆம் ஆண்டிற்கு பின்னால்) உற்பத்தி செய்யப்பட்ட அலைபேசி என்றால் வசதியாக இருக்கும்.  நிற்க : உங்களிடம் பழைய அலைபேசி இருந்தால் கூட பரவாயில்லை. பெரும்பாலும் BHIM பயன்பு வேலை செய்யும். சில நேரங்களில் நிறுவும் போதோ அல்லது உபயோகிக்கும் பொழுதோ  பிழைகள் நேரலாம். அவ்வளவே!


இரண்டாவதாக , உங்களுடைய வங்கி சேமிப்பு கணக்கில்  உங்கள் அலைபேசி எண் (mobile phone number ) இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.  நீங்கள் ATM இல் பணம் எடுக்கும் பொழுது உங்களுக்கு அலைபேசியில் குறுந்செய்தி ( SMS) வந்தால் உங்கள் எண் இணைக்கப்பட்டிருக்கிறது. இல்லை என்றால் உங்கள் வங்கி கிளையை அணுகி இணைக்கவும்.

இரண்டு கட்டியங்களும் உங்கள் விஷயத்தில் பூர்த்தியாகி இருந்தால் BHIM பயன்பை நீங்கள் பயன்படுத்தலாம். பயன்படுத்தும் வழி முறை கீழே படி படியாக பட்டியலிடப்பட்டுள்ளது.

படி 1) முதலில் உங்களுடைய அலைபேசி(mobile phone ) இல் BHIM  பயன்பை  (app ) நிறுவ வேண்டும். இது உங்கள் அலைபேசியின் இயக்க அமைப்பு (operating system ) ஐ பொறுத்து மாறுபடும். உங்கள் அலைபேசி ஆப்பிள் நிறுவனத்தை சார்ந்தது என்றால் கீழே படி 1.1 ஐ படிக்கவும். மாறாக உங்கள் அலைபேசி ஆண்ட்ராய்டு (android ) இயக்க அமைபில் இயங்கினால் படி 1.2 ஐ படிக்கவும்.

படி 1.1) உங்கள் அலைபேசி ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் (iphone ) என்றால் அதில் உள்ள itunes என்கிற பயன்பாட்டு தொகுப்பின் மூலம் BHIM பயன்பை  நிறுவலாம். உங்கள் அலைபேசியில் itunes பயன்பை தொடங்கி அதன் தேடல் பலகத்தில் (search box ) BHIM என்று தட்டச்சிட்டால் (type ) வரும் தேடல் பட்டியலில் முதலிடத்தில் NPCI (National payment Corporation of  India )நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட BHIM பயன்பு நிறுவதற்கான தொடுப்பு தெரிவரும். அதனை சொடுக்கினால் (click செய்தால்) BHIM பயன்பு உங்கள் அலைபேசியில் நிறுவப்படும். நிறுவும் பொழுது சில செய்தி பெட்டிகள் (message box )  உங்கள் தொடுதிரை(touch screen )இல் காண்பிக்கப்படும் . அனைத்திலும் தவறாமல் ஒகே பொத்தான் (OK button ) ஐ சொடுக்கவும்.

படி 1.2) உங்கள் அலைபேசி ஆண்ட்ராய்டு (android ) இல் இயங்கினால்  அதில் உள்ள play store என்கிற பயன்பாட்டு தொகுப்பின் மூலம் BHIM பயன்பை நிறுவலாம். உங்கள் அலைபேசியின் play store பயன்பை தொடங்கி அதன் தேடல் பலகத்தில் (search box ) BHIM என்று தட்டச்சிட்டால் (type ) வரும் தேடல் பட்டியலில் முதலிடத்தில் NPCI (National payment Corporation of  India ) நிறுவனத்தால்  உருவாக்கப்பட்ட BHIM பயன்பு நிறுவதற்கான தொடுப்பு தெரிவரும்.அதனை சொடுக்கினால் (click செய்தால்) BHIM பயன்பு உங்கள் அலைபேசியில் நிறுவப்படும். நிறுவும் பொழுது சில செய்தி பெட்டிகள் (message box )  உங்கள் தொடுதிரை(touch screen )இல் காண்பிக்கப்படும் . அனைத்திலும் தவறாமல் ஒகே பொத்தான் (OK button ) ஐ சொடுக்கவும்.

படி 2.) எந்த வித பிழையும் இல்லாமல் BHIM பயன்பு உங்கள் அலைபேசியில் நிறுவப்பட்டிருந்தால் மேலே படிக்கவும். முதலில் உங்கள் அலைபேசியின் முகப்பு திரையிலிருந்து (home screen ) BHIM பயன்பின் தொடுப்பை அழுத்தவும். உடன் கீழ்கண்ட திரை காண்பிக்கப்படும்.

இந்த திரையில் கீழே வலது புறத்தில் உள்ள NEXT பொத்தானை அழுத்தவும். உடன் இந்த திரை காண்பிக்கப்படும்.
இந்த திரையில் உங்களுடைய மொழியை தேர்ந்தெடுக்கவும். பின்வரும் திரைகள் ஆங்கில மொழியில் எடுக்கப்பட்டன.  பொத்தான்களின் இயல்தரங்களை (standard ) எளிதாக்குவதற்காக ஆங்கில மொழியை தேர்ந்தெடுத்து இருக்கிறோம்.  உங்களுக்கு எளிதாக்குமென்றால் தாராளமாக தமிழ் மொழியை தேர்வு செய்யவும். தமிழை தேர்வு செய்ய தமிழ் என்று எழுந்திருக்கும் பெட்டியை ஒரு முறை அழுத்தவும். அழுத்தியவுடன் வலது புறத்தில் காணப்படும் பச்சை புட் குறியானது (green tick mark ) தமிழ் பெட்டியில் காண்பிக்கப்படும். இப்பொழுது கீழே உள்ள NEXT பொத்தானை அழுத்தவும். உடன் இந்த திரை தெரிய வரும்.
இத்திரை BHIM பயன்பின் சிறப்பு அம்சங்களை விளக்குகிறது. படித்துவிட்டு மீண்டும் NEXT பொத்தானை அழுத்தவும். உடன் கீழே உள்ள திரை காண்பிக்கப்படும்.

இத்திரையில் BHIM பயன்பு உங்களுடைய அலைபேசியில்எந்தெந்த அணுகு அனுமதிகளை (permissions ) உபயோகப்படுத்தும் என்று தெரிவிக்கிறது. BHIM பயன்பு நன்கு செயல்பட இரண்டு அனுமதிகள், அதாவது , குறுஞ்செய்தி அனுப்புதல் (SMS)மற்றும் அலைபேசியின் நிலை ( state ) தேவையாகும்.இந்த அனுமதிகள் பொதுவாக எல்லா பயன்புகளும் பெற்றிடுமாதலால் இவற்றை கொடுத்திடலாம். கீழே உள்ள LET's GET STARTED என்று எழுதப்பட்ட பொத்தானை அழுத்தவும்.உடன் இந்த திரை காண்பிக்கப்படும்.






இந்த திரையில் BHIM பயன்பு உங்களுடைய அலைபேசி எண்ணையும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள வங்கி சேமிப்பு எண்ணையும் உறுதிப்படுத் துகிறது. எப்படி என்றால் உங்கள் அலைபேசி மூலம் ஒரு குறுஞ்செய்தி(SMS) ஒன்றை BHIM இன் வலை சேவையகத்திற்கு அனுப்பி அந்த அலைபேசி எண்ணை பதிவு செய்து உறுதிப்படுத்திக்கொள்கிறது. இங்கே கீழே உள்ள NEXT பொத்தானை அழுத்தினாள் அந்த குறுஞ்செய்தி தானாகவே அனுப்பப்படும். இதற்காக உங்கள் கணக்கில் இருந்து ஒரு 1.50 ரூபாய்கள் எடுத்துக்கொள்ளப்படும். ஆட்சேபணை இல்லை என்றால் NEXT பொத்தானை அழுத்தவும். உடன் கீழ்க்கண்ட திரை காட்சிக்கு வரும்.






அந்த குறுஞ்செய்தி அனுப்பி உறுதி செய்ய சில நிமிடங்கள் ஆகலாம். அந்த நேரத்தில் இந்த திரை காண்பிக்கப்படும். உறுதி செய்யப்பட்டால் , உங்களுக்கு "Mobile number verified " என்கின்ற செய்தியுடன் கீழே உள்ள திரை காண்பிக்க படும்.உறுதி செய்யப்படாவிட்டால் பிழை செய்தியுடன் ஒரு திரை காட்சிக்கு வரும்.  பெரும்பாலும் இது வலையமைப்பு (network ) சரியில்லாவிட்டால் ஏற்படும். சிறிது நேரம் கழித்து முயற்சி செய்தால் வெற்றிகரமாக உறுதி செய்யப்படும்.இப்பொழுது கீழ்க்கண்ட திரை காண்பிக்க படும்.




 இப்பொழுது BHIM பயன்பில் பாதுகாப்பிற்காக ஒரு அடையாள எண்ணை அமைக்கவும். இந்த எண் உங்கள்  BHIM பயன்பை திறக்கும் இரகசிய சொல்லாகும். ஆகவே பத்திரமாக பிறர் கண் படாமல் பாதுகாப்பாக வைக்கவும்.
இது வரை நீங்கள் சரியாக செய்தீர்களானால் , உங்கள் BHIM பயன்பு உபயோகப்படுத்துவதற்கு தயாராகிவிட்டது. இனி அடுத்த பதிவில் BHIM  மூலம் பணம் எப்படி அனுப்புவது என்று பார்க்கலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பாகம் இரண்டு: வரி..வட்டி..கிஸ்தி.

பத்தாம் நூற்றாண்டு .. காலம் காலமாக  தமிழகம் சேர, சோழ பாண்டிய மன்னர்களால்  சமபங்காக    ஆளப்பட்டு வந்த சூழ்நிலை மாறி  சோழ மன்னர்களின் ஆதிக்கம் மேலே எழும்ப தொடஙகிய காலம்.விஜயாலய சோழன் , ராஜ ராஜ சோழன் , ராஜேந்திர சோழன் போன்ற வீர புத்திரர்கள் தமிழ் மண்ணில் கால் பதித்து நடந்த காலம். சோழ ராஜ்ஜியத்தில் நாட்டு நிர்வாகம் சீர்படுத்தப்பட்டு சோழ மன்னர்களின் நேரடி கண்காணிப்பில் கொணரப்பட்டது. இதில் முக்கியமாக வரி நிலுவை மற்றும் வசூல் செய்யும் அதிகாரம் குறுநில மன்னர்களிடமிருந்து பறிக்கப்பட்டு சோழ மன்னனின் நேர் சேவையில் பணியாற்றும் அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது. வரி வசூலிப்பில் இந்த வழக்கம், அக்காலத்து சமூகத்தில் ஓர் பெரிய மாற்றத்தை உண்டாக்கியது. தமிழக ஊர்களில் நாம் முந்தைய பதிவில் பார்த்தபடி வரி நிலுவை ஊர் தலைவர்களால் நியமிக்கப்பட்டு , அதில் ஒரு பங்கு அந்த பகுதியின் குறுநில மன்னனிடம் அளிக்கப்படும். அக்குறுநில மன்னனும் அப்பகுதியை சேர்ந்தவனானதால் வரி நிலுவைகளில்  பெரிய கருத்து வேறுபாடுகள் இருக்காது. சோழ நாட்டில் வரலாற்றில் முதல் முறையாக ஒரு ஊர் தர வேண்டிய வரிப்பணத்த...

மனதில் ஒரு ஜல்லிகட்டு

ஜல்லிக்கட்டு தடையை நீக்க கோரி கடந்த வாரம் நடந்த போராட்டம். அதனை ஒட்டி வந்த சில "whatsapp" செய்திகள், "facebook" பதிவுகள். அதன் பின்னர் நடைபெற்ற சில சம்பவங்கள். இவைகளின் திரட்டுகள், சிந்தனைக்கு..பிழை இருந்தால் மன்னிக்கவும். 1) சதிகளும் சூழ்ச்சிகளும் கதைகளில் படிக்க , படங்களில் பார்க்க நன்றாக இருக்கும். நடைமுறை வாழ்க்கை அவ்வாறாக இருந்தால் என்னாவது? தமிழ் மக்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 50 மில்லியன் என எடுத்து கொள்வோம். மொத்த உலகத்தின் தற்போதைய மக்கள் தொகை 6 பில்லியன். உலகத்தில் உள்ள அனைவருக்கும் தமிழர்களின் பாரம்பரியத்தை குலைப்பதே வேலையாக இருக்க முடியுமா? PETA வின் நடவடிக்கையானது ஜல்லிக்கட்டு விஷயத்தில் பாதகமாக இருக்கலாம். அதற்காக  அந்நிறுவனத்தையும், அந்நிறுவனத்தின் ஆதரவாளர்களையும் முக்கியமாக அந்நிறுவனத்தின்  இந்திய  கிளை முதல்வரை  சேடுவது நமது பாரம்பரியம் தானா?  2) சமுக வலையில் வரும்  செய்திகள் எல்லாம் 100 /100 உண்மை என நம்பி நாமும் பகிர்கின்றோம். உங்கள் ஊர்களில் நடுவில் கூரை ஒன்று அமைத்து ஒலி பெருக்கிகளில்  செய்திகளை பரப்பி , அவற்றில் பெ...

பாகம் ஒன்று: வரி . வட்டி. கிஸ்தி.

"தமிழில் எனக்கு பிடிக்காத வார்த்தை மன்னிப்பு"  என கேப்டன் கர்ஜிக்கலாம். ஆனால் உண்மையில் நமக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை "வரி' யாகத்தான் இருக்கும். சமீபத்திய கணக்கெடுப்பு ஒன்றில் 100 இல் 2 இந்தியர் மட்டுமே வரி காட்டுவதாக செய்தி வெளியானது. இதன் மூலம்  வரி ஏய்ப்பு நமது தேசிய குணமென்று தெரிந்து கொள்ளலாம் . ஆனால் இக்குணம் எப்படி உருவானது என்று அறிந்து கொள்ள நாம் சரித்திரத்தின் பக்கங்களை புரட்டி பார்க்க வேண்டும். "கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய  மூத்த குடி தமிழ் குடி" என்று மார் தட்டி கொள்வோம். அத்தகைய  ஆதி காலத்தில் இருந்தே நமது தமிழ் நாட்டில் வரி என்பது  "திரை " எனவும் "இறை" எனவும் வழக்கில் இருந்தது. பண்டைய தமிழகத்தின் ஊர் நிர்வாகம் இன்றைய முன்னேறிய நாடுகளின் நிர்வாகத்தையும் வெக்கி தலை குனிய வைக்கும். தமிழக வரி நிர்வாகத்தில் ஊர்கள்  மிக முக்கிய இடம் பெற்றிருந்தன. இன்றைய அரசு போலன்று பழந்தமிழகத்தில் கிராமங்களும், ஊர்களும் தற்காலத்திய தனியார் நிறுவனங்கள் போல் செயல்பட்டன.ஒவ்வொரு ஊரும் தத்தமது  வரவு செலவுகளை தீர...